Wednesday, September 11, 2019

Gayatri Mantra Miracles

காயத்ரி மந்திரம்:-2
--------------------------------
அணு முதல் அண்டம் வரை
அனைத்தும் அதிர்வுகளால் ஆக்கப்பட்டு
அதாலே சூழ்ந்துள்ளன.

அதிர்வுகள் அலைகளை ஏற்படுத்துகின்றன.
அலைகளே  சக்தியை தருகின்றன.
அனைத்தும் இயங்க அதிர்வலைகளே
காரணமாகின்றன.

காயத்ரி மந்திரம் உடலில் உள்ள சக்தி நிலைகளான ஆதார சக்கிரங்களை
சீர்படுத்தி அதனதன் அதிர்வுகளில்
செம்மையாக இயங்க உறுதுணை புரிகிறது.

ஒரு குறிப்பிட்ட பிரிவினரே பயன்படுத்தி வந்த
காயத்ரி மந்திரம் அனைவருக்குமானது.
எளிதானது. உயர்வானது.

இம் மந்திரத்தைச் முறைப்படி சொல்லச் சொல்ல
உடல் புத்துணர்ச்சியையும், புதிய தெம்பையும்
பெறுகிறது.

காயத்ரி மந்திரம் குறித்து அறிஞர்கள் கூறுவது:

பாரதியார் : செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள்
அறிவைத் தூண்டி நடத்துக.

சுவாமி விவேகானந்தர்: மந்திரங்களின் கிரீடம்.

J.B.S. Holdane (British- Indian Scientist):
ஒவ்வொரு இரசாயன கூடத்தின் வாயிற்கதவிலும் காயத்ரி மந்திரம்
பொறிக்கப்பட வேண்டும்.

பகவான் கிருஷ்ணர்: மந்திரங்களில் நான்
காயத்ரி மந்திரமாக உள்ளேன்.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்ஸர்:
இது மிகச் சிறிய மந்திரம். ஆனால் மிக மிக
சக்தி வாய்ந்தது.

மேலை நாட்டு ஞாநி Arthur Koestler :(Darkness at
noon எனும் உலகப் பிரசித்தி பெற்ற நூலாசிரியர்)
1000 அணு குண்டுகளின் சக்தி வாய்ந்தது.

ஜெர்மன் ஞாநி மேக்ஸ் முல்லர்:
ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனத்தினை உயர்த்துவோம்.

மகாத்மா காந்தி: யாரொருவர் காயத்ரி மந்திரம்
ஜெபிக்கிறாரோ அவர் நோயிக்கு ஆளாகமாட்டார்.

... தொடர்ந்து ஜெபிப்போம்.

Dr.Suresh
Master Shiva Guru Vasi Yoga
SPARK YOGA

No comments:

Post a Comment