Thursday, October 31, 2019

Ahobilum God's Own Home

www.supremeholisticinstitute.com

சகல பாவ, சாப, தோஷ நிவர்த்தி ஸ்தலம் -அகோ பலம் - அகோபிலம்:

        >>   ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று   கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருமலையாய்  எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி . அகோபிலம் என்ற இந்த  திவ்ய தேசம் ஆந்திரா மாநிலத்தில்  கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'.


        >>  கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள  அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது  நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

      >>  இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.

         >>  திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.

        >>  இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.

        >> அகோபிலம் என்னும் திவ்ய தேசத்தில் நரசிம்மர், அகோ பலம் என்று சிறப்பித்து சொல்லும் விதத்தில் சேவை சாதிக்கிறார். இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் அகோ பலம்! அகோ பலம்! என்று சொல்லி வணங்கினர். அகோபிலம் என்பதற்கு சிங்க குகை என்பது பொருள். அகோ பலம் என்றால் ஆச்சரியம் மிக்க பலம் கொண்டவர் என்று பொருள். 

         >>  இரண்டு தளங்களாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆல்யமும் அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்று அழைக்கப்படுகின்றது. அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்று அழைப்படுகின்றது. மற்ற நவ நரசிம்மர் ஆலயங்கள் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.

     >> மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உண்மையான உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களையும் சேவிக்க முடியும். எனவே தான் திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!" என்று பாடியுள்ளார்.

   >> நரசிம்மர் அவதாரம் எடுத்த தூணும், நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவாரக்கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை "ஜெயஸ்தம்பம்' அதாவது வெற்றித்தூண் என்கிறார்கள். இந்த தூணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலை நிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்த தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

      >>  ராமபிரான் சீதையை தேடி வரும் போது இந்த தூணின் முன்பு வழிபாடு செய்ததாகவும், வழிபாடு செய்தவுடன் சீதை கிடைத்து விட்டதைப்போன்ற உணர்வு ராமனுக்கு ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது

     >>   புகழ் பெற்ற இந்த அகோபிலம் தலம் அமைந்துள்ள மலைப்பகுதி ஆதிசேஷன் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. இம்மலைத் தொடரின் ஒரு பக்கம் திருமலை அமைந்திருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரீசைலம் விளங்குகிறது. கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே! அவை வருமாறு:-

1. அகோபில நரசிம்மர்: குரு
   
      >>  உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.

2. பார்க்கவ நரசிம்மர்: சூரியன்
   >>  மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)

3. யோகானந்த நரசிம்மர்: சனி

      >> மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள் ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

4. சத்ரவத நரசிம்மர்: கேது

      >>  கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.

5. க்ரோத (வராக) நரசிம்மர்:ராகு

      >>  பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ள னர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயரு டைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.

6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: சந்திரன்

     >> மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

7. மாலோல நரசிம்மர்: சுக்கிரன்

          >>   "மா' என்றால் லட்சுமி. "லோலன்' என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

8. பாவன நரசிம்மர்: புதன்

     >> பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

9. ஜ்வாலா நரசிம்மர்: செவ்வாய்

    >>  மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

        >>  மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இதனை "நவ நரசிம்ம க்ஷேத்ரம்' என்பர்.

      >> இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

       >> காலை முதலே கோவிலில் இருந்தால் மட்டுமே மாலைக்குள் ஒன்பது நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசிக்க முடியும் ..

      >> மேலே அஹோபிலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது ..அதற்கு மேல் மலையேறிதான் மூன்று நரசிம்மர்களை தரிசிக்க முடியும்.

     >>  மலையேற்றம் கொஞ்சம் கடினம் தான் போக இரண்டு மணிநேரம் வர ரெண்டு மணி நேரம் ஆகும் ..ஊன்றுகோல் அங்கே கிடைகிறது ..

    >> மீதி நரசிம்மர்களை தரிசிக்க வண்டி வசதி உள்ளது .அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவன நரசிம்மரை தரிசிக்க போகும் பாதை மிகவும் கடினமாக உள்ளது .வாழ்வில் மறக்க இயலாது ..
 
        >> ஒவ்வொரு நரசிம்மரையும் தரிசிக்க தரிசிக்க அருமையான அனுபவங்களை என்னால் உணர முடிந்தது .

   >> அவன் அருள் இருந்தால் மட்டுமே அகோபிலத்தை நம்மால் தரிசக்க இயலும் .ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் தரிசக்க வேண்டிய ஈரப்பு மிக்க திவ்ய -திருத்தலம் ..

   >> மலை அடிவாரத்தில் உங்களை அழைத்து செல்ல கைடுகள்  இருகிறார்கள்..சிறு குழுவாக சேர்ந்து ஒரு கைடு என வைத்து கொள்ளலாம் ..ஒருவர்க்கு சுமார் 500 போதுமானது ..

   >>  சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் . இக்கோவிலுக்கு கோயிலுக்கு ஆலகட்டா (23 கீ.மி.) மற்றும் கடப்பாவில் (70 கி.மீ) இருந்து பேருந்து வசதி உள்ளது. நந்தியால் மற்றும் கர்நூல் ரயில் நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன..ஒருமுறை சென்று வாருங்கள் ..அருமையாக உள்ளது .

Dr.V.Suresh
Master :Shiva Guru Vasi Yoga.
SPARK alchemy Yoga.
Founder: Satya Yuga Samsthapana & Paripalana Kendra.

Wednesday, October 30, 2019

Saravanan True meaning

கந்தர் சஷ்டி ஸ்பெஷல் !

மு  – முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு – ருத்ரன் என்கிற சிவன்
க – கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

ஆறுமுகமான – சண்முக தத்துவம் என்ன ?

ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் – அக்னிக்கு,
மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் – பிரம்மனுக்கு,
ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் – கந்தனுக்கு.

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :

உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.
ஸரவணபவ – என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன?

ஸ – லக்ஷ்மிகடாக்ஷம்
ர – ஸரஸ்வதி கடாக்ஷம்
வ – போகம் – மோக்ஷம்
ண – சத்ருஜயம்
ப – ம்ருத்யுஜயம்
வ – நோயற்ற வாழ்வு

ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி எல்லா பயன்களும் பெறலாம்.

ஸ்கந்தா சரணம் ! ஸ்கந்தா சரணம்...!
சரவணபவ குஹா சரணம்...!

Sri Krishna Leela Secrets

#_அகத்தியர்_வாக்கு
#_கிருஷ்ண_அவதார_நோக்கம்

இராமாயண காலத்தில் நடந்த விஷயங்களில், மிக முக்கியமான சூழ்நிலைகளில், அகத்தியப் பெருமான், ஸ்ரீ ராமன் முன் தோன்றி அவரை சரியான பாதையில், வழி நடத்தியுள்ளார். யுத்தகாண்டத்தில், ஆதித்த்யஹ்ருதயம் என்கிற ஸ்லோகத்தை ஸ்ரீராமருக்கு உபதேசித்து அவரை ராவணனுக்கு எதிரான யுத்தத்தில். வெற்றி பெறச் செய்தார். இன்றளவும், அந்த சுலோகம் நம் உள்ளளவில் நின்று, பலரின் வாழ்க்கையிலும், அவர்களை வெற்றி பெறச் செய்கிறது என்றால், அதற்கு காரணம், அகத்தியப் பெருமான், கலியுகத்தில், நல்லவர்கள், அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை வீழ்த்தி, வெற்றி பெற வேண்டும் என்று அன்றே நினைத்ததுதான்! ஆதித்யஹ்ருதயம் மந்திரத்தினுள் எத்தனை சூட்சுமமான பலம் பொருந்திய பீஜாக்ஷரங்களை அகத்தியப் பெருமான் எப்படி பொருத்தியுள்ளார், என்று தெய்வ மொழியில் தலை சிறந்த ஒருவராலேயே கண்டறிய முடியும். அதற்கும் அகத்தியப் பெருமான் அருள் வேண்டும்.

தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ராசலீலை நடத்தியது ஏன் என்ற கேள்வி மனிதரிடையில் இன்றும் நிலவி வருகிறது. ஒரு சிலரால் அது தவறாகவும் சித்தரிக்கப் படுகிறது. அகத்தியப் பெருமான் எப்போதும் சொல்வது போல், அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும், சூட்ச்சும அர்த்தங்கள் பலதும் உண்டு. அதை கண்டுபிடித்து தெளிவடைவது என்பது மிக அரிதான விஷயம். இருந்தும், அகத்தியப் பெருமான், ஸ்ரீ கிருஷ்ணரின் ராசலீலையை பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகா ஸ்திரீகளுடன், நீரிலும், நிலத்திலும், ஆடிப்பாடி அவர்களை மகிழ்வித்ததே ராசலீலை ஆகும். சாதாரண மனிதனின் கண்களுக்கு, அவர்கள் அழகு, வதனம் நிறைந்த பெண்களாகத்தான் காண முடியும். ஆனால் சர்வமும் அறிந்த பரமாத்மாவிற்கு, இது ராம அவதாரத்தின் பாக்கி, இந்த அவதாரத்தில் நிறைவு பெறுகிறது என்று உணர முடிந்தது.

த்ரேதா யுகத்தில் ராமபிரான் வனவாசம் ஏகிய பொழுது, பல ரிஷிகள், "ராமன் தன் ஆஸ்ரமம் வருவாரா? அவர் திருமேனியை, திருவடியைத் தொட்டு தழுவும் பாக்கியம் கிட்டாதா? என்று ஏங்கினர். கடும் தவத்தை மேற்கொண்டதால், அவர்கள் தங்கள் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையும் கூட. ஸ்ரீ ராமரால் அனைத்து ரிஷிகளின் அபிலாக்ஷைகளையும் பூர்த்தி செய்ய, அனைவரின் அச்ரமங்களுக்கு செல்ல முடியாத நிலை. மிகச் சுருக்கமான முனிவர்களை, அதாவது அகத்தியர், பரத்வாஜர், சபரி போன்ற ரிஷிகளையே ஸ்ரீ ராமன் சந்திக்க முடிந்தது. அதற்குள், கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள் போன்றவை இடைப்பட, ஸ்ரீராம்னால், மற்ற நூற்றுக் கணக்கான ரிஷிகளை சந்திக்க இயலவில்லை. அத்தனை ரிஷிகளின் நிறைவேறாத ஆசைகளும், வாசனையாக மாறி, ஸ்ரீ ராமனை பற்றிக் கொண்டது.

யுத்த காண்டத்தில், இலக்குவன், போரில் மூர்ச்சையுற, மனம் தளர்ந்து நின்ற ஸ்ரீ ராமன் முன் ஸ்ரீ அகத்தியப் பெருமான் தோன்றி, ஸ்ரீ ராமருக்கு ஆதித்யஹ்ருதயம் என்கிற ஸ்லோகத்தை உபதேசித்து அருளினார்.

பின்னர், "ஸ்ரீ ராமா! என்னுடன் வந்திருக்கும் முனிவர்களையும், ரிஷிகளையும் வணங்குவாயாக. நீ வனவாசம் பூண்ட பொழுது பல ரிஷிகள், நின் மானுட திவ்ய ரூபத்தை தரிசனம் செய்யத் துடித்தனர். அதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகவே, அவர்களுள் தாங்கள் ஏற்ற தவ நிலைகள் முடிந்தவர்களை உன் தரிசனதிற்காக இங்கு அழைத்து வந்துள்ளேன். உன் திரு உடலை ஆலிங்கனம் செய்து, உனக்கு உடலால் சேவை செய்ய இவர்கள் உளமார விரும்புகின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்வாயாக" என்றார்.

ஸ்ரீ ராமரும் அவ்வாறே இசைய அகத்தியப் பெருமான் "ஸ்ரீ ராமா! இன்னும் நூற்றுக் கணக்கான ரிஷிகள், மகரிஷிகள், வனங்களில் உன் மானுட ரூப தேகத்தை தரிசிக்க ஆவலாய் உள்ளனர். அவர்கள் இன்னும் தண்டகாரண்யத்தில் கடுந்தவத்தில் இருப்பதால் வனத்தை விட்டு வெளிவர இயலவில்லை. உன் வனவாசத்தில் அவர்களுக்குத் தரிசனம் தருவாய் என வழிமேல் விழிவைத்துக் காத்து நின்று ஏமாற்றமடைந்து விட்டனர். அவர்களுடைய அபிலாக்ஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறாய்? உன் ராமாவதாரதிற்குள் இது சாத்தியமா? என்று வினவினார்.

அட! ஆமாம்! இந்த ராமாவதார முடிவுக்குள், அத்தனை பேர் ஆசைகளையும் என்னால் நிறைவேற்ற முடியாதே! என்று திகைத்து நின்ற ஸ்ரீராமர், அகத்தியப் பெருமானிடம் "முனி சிரேஷ்டரே! நூற்றுக்கணக்கான ரிஷிகளின் புனிதமான உள்ளம் ஏங்க நான் காரணமாகிவிட்டேனோ? இனி அவர்களை சந்திப்பது சாத்தியம் அல்லவே! தாங்கள்தான் எனக்கு நல்வழி காட்டவேண்டும்!" என்று வேண்டினார்.

அப்போது, அகத்தியர், "ஸ்ரீ ராமா! நீ சாட்சாத் நாராயணனின் திரு அவதாரம் என்பதை அவர்கள் அறிவார்கள். உனது அடுத்த அவதாரத்தில், துவாபர யுகத்தில் நீ ஸ்ரீகிருஷ்ணனாக அவதரிக்கும் பொழுது, ராமாவதாரத்தில் உன்னை கண்டு சேவை செய்ய ஏங்கிய மகரிஷிகள், உன் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கோபிகா ஸ்த்ரீகளாய் பிறந்து உன்னுடன் தவழ்ந்து விளையாடி, அற்புதமான பக்தி பரவச நிலையை அடைவார்கள். இது அவதார இரகசியமாகும்" என்று அருளினார்.

ஆகவே, ராசலீலையில் ஸ்ரீ கிருஷ்ணன் விளையாடியது ராமாவதார மகரிஷிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவே ஆகும்.ராமாவதார பூர்வ ஜென்ம வாசனைகளுடன், பூர்ணாவதார மூர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்பர்சிக்க, கோபிகா ஸ்த்ரீகளான மகரிஷிகள், இரு அவதார மூர்த்திகளின் தெயவாம்சங்களால், பக்தி பெருக்கின் உன்னத நிலையை அடையும் பேறு பெற்றனர்.

அகத்தியப் பெருமானின் அருளால் நடந்த நிகழ்ச்சிகளை உற்றுப் பார்த்தால், ஒன்று புரியும். சூட்ச்சுமம் விளங்க வேண்டும் என்றால், அதற்கு அவரின் அருள் இருந்தால்தான் முடியும். முன் சொன்னது போல், தலை முதல் பாதம் வரை புண்ணிய எண்ணங்கள் பூத்து குலுங்கம் ஒவ்வொரு அடியவருக்கும், அகத்தியப் பெருமானின் அருள் என்பது சுலபமே, அனைத்து சூட்ச்சுமமும் விளக்கப்படும், விளங்கும்.

எல்லோரும் அவர் அருள் பெற வாழ்த்துகிறேன்!

Dr.Suresh
Shiva Guru Vasi Yoga

Naayurivi Mooligai Features and Uniqness

Dr.V.Suresh MD(AM), DHSM,DYNC, FRHS,PhD.,

தெரிந்த மூலிகை தெரியாத விஷயங்கள்.
#நாயுருவி.

அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி செந்நாயுருவி, படருருக்கி, கல்லுருவி என வேறு பெயர்களும் நாயுருவிக்கு உண்டு.
சிவப்பு நிறம், வெள்ளை நிறம் என இருவகை உண்டு.

இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். நாயுருவி வேரை காயவைத்து, தூள் செய்து இந்தத் தூளால் பல் துலக்கி வரலாம் அல்லது பச்சை வேரை சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து பல் துலக்கி வர பற்கள் உறுதியடையும்.

நாயுருவி வேர்த்தூள் ½ முதல் 1 கிராம் வரை வெந்நீரில் சாப்பிட்டு வர உடல் பலமடையும். நாயுருவி வேர் அல்லது இலையைஅரைத்து பசையாக்கி, உடலில் வர பூச கொப்புளம், சிரங்கு குணமாகும்.

பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் வராமல் தடுத்து பற்களைப் பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி மூலிகைக்கு உண்டு. நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து காலையில் குடித்து வர பேதியாகும்.

துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.
நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, தவிர்க்க வேண்டும். நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ள இடத்தில தொப்புள் மீது பற்றிட நீர் கட்டு நீங்கி குணமாகும். நாயுருவிச்செடியின் இலையின் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறு நீரக நோய்கள் அனைத்தும் தீரும்.
நாயுருவி இலையை 30கிராம் அத்துடன் பத்து மிளகு, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துச் சாப்பிட, அனைத்து விதமான காய்ச்சல்களும் விலகும். நாயுருவி இலைச்சாறு 500 மி.லி . எடுத்துசட்டியில் இட்டு காய்ச்சி சுண்ட வைத்து, 100மி.லி நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பின்னர் இரண்டு சின்ன வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கி, இரண்டு நாட்டுக் கோழி முட்டையை உடைத்துச் சேர்த்து நன்கு கிளறி, சாப்பிட வர , மூலத்தில் உண்டாகும் ரத்தக் கழிச்சலானது உடனே தீரும்.

For Healthy Body Karisalai Uses

Dr.V.Suresh MD(AM),Dr.Ac,DHSM,DYNC,FRHS,PhD.,
Founder :Aadhi Shiva Guru Vasi Yoga.
SPARK YOGA Alchemy.
Satya Yuga Samsthapana & Paripalana Kendra .

சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி.

உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம்.

சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும்.

இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.

இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைக்க வேண்டும்.

அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து  அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும்.

இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும்.கோழையை கழற்றுதல் என்பது இதுவே.

இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும்.

குறிப்பாக யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இச்செய்முறையை கடைபிடித்து கோழையை கழற்றி அதன்பின்பு பயிற்சியில் ஈடுபடுதல் மிகுந்த பலனை அளிக்கும்.🔱
Rajayogi Shiva Guru Dr.V.Suresh

Mind and Thoughts Secrets

"Aadhi Shiva Guru Vasi Yogam"

 Dr.V.Suresh MD(AM),Dr.Ac,DHSM,DYNC,Phd.,
Grand Master:Reiki
Founder :Shiva Guru Vasi Yoga.
SPARK YOGA Alchemy.
Satya Yuga Samsthapana & Paripalana Kendra.

எண்ணங்களின் வலிமை
======================

'யத் பாவம் - தத் பவதி'   நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகுவாய் என்கிறது வேதம்.

மனத்தானம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானம்
இன்னான் எனப்படுஞ் செயல்.

ஒருவரின் உணர்ச்சி, மனத்தை பொறுத்து அமையும் என்கிறார் வள்ளுவர்.

நமது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்துக்கும் நமது எண்ணங்களே காரணங்களாகின்றன. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பாகும். நமது மனம் எண்ணங்களை உருவாக்கும் தொழிற்சாலை போன்றதாகும். இதில் நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் என மாறி மாறி தோன்றி கொண்டேயிருக்கும். இன்றைய மனோத்தத்துவ நிபுணர்களின் கருத்துப்படி ஒரு நாளில் நம்முடைய மனதில் தோராயமாக 40000 எண்ணங்கள் வந்து செல்கின்றன. இவற்றில் பெரும்பாலும் உபயோகமற்ற மற்றும் எதிர்மறை எண்ணங்ளாகவே இருக்கின்றன என்று கூறுகின்றனர். மேலும் நம்மிடம் தோன்றும் எண்ணங்களை நாம் சரியாக கவனிக்காமல் இருந்தால் நாம் அவற்றால் பாதிக்கப்படுவோம். ஒரு நல்ல விளைநிலத்தில் எந்த விதமான செயலையும் செய்யாமல் விட்டு விட்டோமானால் அந்த விளை நிலத்தில் அனைத்து விதமான செடிகளும் முளைத்து விடும். மேலும் தீய உயிரினங்கள் வாழும் இடமாகவும் அது திகழும். அது போல நம் மனம் என்ற நிலத்தில் நல்ல விதைகளை (எண்ணங்களை) விதைக்காமல் இருந்தாலோ அல்லது அதன் போக்கில் விட்டு விட்டாலோ அது நமது வாழ்க்கையை சீரழிக்கும் பாதைக்கு நம் மனம் கூட்டி சென்று விடும்.

நமது மனதின் குணத்தை நமது முன்னோர்கள் குரங்கு புத்தியுடன் ஒப்பிட்டார்கள். நீங்கள் குரங்கு எவ்வாறு மனிதனிடம் பிடிபடுகிறது என்பதை அறிவீர்களா? ஒரு நீண்ட கழுத்துள்ள மண் குவளையை ஒரு இடத்தில் பதிய வைத்து அதன் உள் பழங்களை வைத்து விடுவார்கள். குரங்கின் கை ஆனது உள்ளே சென்று பழத்தை பற்றி கொண்டு வெளியே எடுக்க முயற்சிக்கும் போது அதனால் அதன் கையை வெளியே எடுக்காதவாறு குவளையின் வாய் பகுதி தடுக்கும். குரங்கானது பழத்தின் மீது உள்ள பற்றினை விடாமல் முயற்சி செய்து பார்த்து கையை வெளியே எடுக்க முடியாமல் அப்படியே அமர்ந்து விடும். ஆனால் அது தன்னுடைய கையை பழத்தின் மீது இருந்து எடுத்து விட்டால் அது அந்த குவளையிடமிருந்து விடுபட்டு சென்று விடலாம். ஆனால் அதன் புத்தியானது பிடித்ததை விடாமல் பற்றி கொண்டதிலேயே இருக்கும். சில நேரங்களில் அப்படியே இருந்து உணவின்றி அது இறந்து போகும். இது போல தான் நாம் நம் மனதில் எழும் எண்ணங்களை ஆராயாமல் உடனடியாக செயல்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் பிரச்சனையில் சிக்கி நம்மை நாம் இழந்து விடுகிறோம்.

இன்று நாம்  காணும் அனைத்து பொருட்களுமே என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு மனிதனின் மனதில் உதிர்ந்த எண்ணங்களின் வெளிப்பாடே ஆகும். இன்றைய சமுதாயத்தில் நிலவும் அனைத்து சூழ்நிலைக்கும் காரணம் மனிதனின் மனதில் எழும் எண்ணங்களின் செயல்பாடுகளே என்பதை மறுக்க முடியாது. ஆகவே எண்ணங்களின் வலிமையை கொண்டு நாம் ஆக்கபூர்வமான காரியங்களையும் செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் காரியங்களையும் செய்ய முடியும். நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் கடலில் தோன்றும் அலைகளுக்கு ஒப்பிடலாம். எப்படி நாம் கடலின் அலைகளை கடந்து உள்ளே சென்றோமானால் கடலின் அமைதியை காண்கிறோம் மேலும் அதன் உள்ளே முழ்கி சென்றால் விலைமதிப்பிலாத முத்து மற்றும் பவிழம் போன்ற விலையுர்ந்த பொருட்களை நம்மால் கண்டு எடுக்க முடியுமோ, அது போல் நாம் நமது மனதின் உள்ளே சென்று ஆழ் மனதின் செயல்பாடுகளை புரிந்து கொண்டோமானால் நாம் விரும்பியது அனைத்தும் நம்மால் அடையமுடியும்.
நம்முடைய எண்ணங்களை பொறுத்து நம் உடலை சுற்றி ஒளி வட்டம் உள்ளது. இதனை ஆரா என்று அழைப்பார்கள். இது அனைத்து மனிதர்களிடமும் உண்டு. நாம் சந்திக்கும் மனிதர்களின் உடலில் இருந்து வெளிப்படும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை எண்ணங்களை நம் உடலானது பெற்று அதன் மூலமும் நம் மனதில் மாற்றம் ஏற்படுகிறது.  உதாரணமாக ஆன்மீக பெரியோர்களை நாம் சந்திக்கும் போது நம் மனம் மிகவும் சாந்தியடைகிறது. சில சுயநலப்போக்கு கொண்ட மனிதர்களை சந்திக்கும் போது நமது மனம் பாதிப்பிற்கு உள்ளாகிறது இவை அனைத்துமே அவர்களிடமிருந்து வெளிப்படும் எண்ண அதிர்வினால் தான்.

நேர்மறை எண்ணங்களை மேம்படுத்த கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்.
1.       பயிற்சி பெற்ற சிறந்த யோக நிபுணர்களை அணுகி மனதினை ஒரு முகப்படுத்தும் ஆசனங்கள் மற்றும் தியான முறைகளை பின்பற்றுதல்.
2.      சத்சங்களில் நாம் இணைந்திருத்தல்.
3.      இறைவன் நாமத்தை தொடர்ந்து ஜபித்தல்.
4.      சாத்வீக உணவுகளை உட்கொண்டு, சாத்வீக உணர்வு உள்ளவர்களிடம் பழகுதல்.
5.      ஆலய வழிப்பாடு செய்தல்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில செயல்களால் நாம் நமது நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தி கொள்ளமுடியும். எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒரு தீக்குச்சி போன்றது நாம் அதனை புத்தி என்னும் தீப்பெட்டியால் உரசும் போது அது தீப்பற்றி கொள்கிறது. அந்த தீயை  நாம் நல்லவற்றுக்கும் பயன்படுத்தமுடியும் தீயவற்றுக்கும் பயன் படுத்த முடியும். முறையாக பயன்படுத்த தவறினால் நம்மையே அந்த தீ அழித்து விடும். ஆகவே நாம் நமது எண்ணங்களை முறைப்படுத்துவோம். அதன் மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்துவோம்.

Rajayogi Shiva Yoga Guru Dr.Suresh.

Tuesday, October 22, 2019

Soul Seat in Human Body

Sri Aadhi Shiva Guru Vasi Yogam

Dr.Suresh
Master : Aadhi Shiva Guru Vasi Yoga

திருமூலர் சிந்தனை :
================

"திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும்"
---------------------------------------------------------------------

"நமது உடலில் உயிர் எங்கே
இருக்கிறது ( அமர்கிறது ) விளக்கும்
திருமூலரின் திருமந்திரம்" :

நமது உடலில் உயிர் ஓடிக் கொடிருப்பதால் தான் நாம் செயல்பட முடிகிறது என்பது இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.
இதே திருமந்திரத்தில் ஒரு தாயின் தொப்புல்கொடியில் இருந்துதான் கரு என்னும் பிண்டத்திற்கு மெல்லிய சத்ததுடன் உயிர் சென்று கருவுக்கு உயிரூட்டுகிறது என்பதை திருமூலர் கூரியுள்ளார்.
ஆனால் அவ்வாறு சென்ற உயிர் உடலில் எந்த பாகத்தில் போய் அமர்கிறது என்ற சந்தேகம் மேலோங்கும்.

அந்த சந்தேகத்தை திருமூலரே தீர்த்து வைக்கிறார்.

“உச்சிக்கு கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை”
“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே” (தி.ம 309)

பொருள்:
உயிர் சென்று அமரும் இடம் தலை உச்சிக்கு கீழே உள்நாக்கிற்கு மேலே. தாயின் தொப்புள் கொடியில் இருந்து வரும் உயிர் நமது உச்சிக்கு கீழே வந்தமருகிறது.

விஞ்ஞானம்:
இன்றைய விஞ்ஞானத்தின் படி பார்த்தாலும் நமது நரம்பு மண்டலத்தின் முடிச்சி இந்த இடத்தில்தான் அமைந்துள்ளது.
நமது முதுகு தண்டுவடம் (Spinal card) இந்த இடத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
உயிர் அமரும் இடமட்டுமல்லாமல் அதன் வடிவத்தையும் நிறத்தையும் பற்றிக் கூட நமது திருமூலர் சித்தர் கூறியிருக்கிறார்.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

OM secrets

Dr.Suresh
Master : Shiva Guru Vasi Yogam

ௐ ஓங்காரம்(பிரணவம்)
======================

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.
இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.
வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,
"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)
"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)
என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-

என்பவற்றாலும் அறியலாம்.
உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து:
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,
அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,
அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்
உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.
இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்
அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "
என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.
ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.
இதை விளக்கும்படி திருமூலர்,
ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.
"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.
"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
போன்றவை எளிதானவைதானே!
பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :
பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....
ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.

Thursday, October 3, 2019

What is Jeeva Samadhi


What is Jeeva Samadhi ?

ஒருவர் தவத்தின் மூலமாகவும், தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப்பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும்,

உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும்விட்டால்,

மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மனஇயக்கம், உடல் இயக்கம் நின்றுவிட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிருப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதுவே ஜீவசமாதி.

இதுபோலத் தமிழ்நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகியிருக்கிறார்கள்.

அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளார்கள்.

என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்றபோது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.

சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை.

ஜீவன் என்றால் உயிர். சமாதி என்றால் சமன்-ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

இறையே குருவே சரணம் சரணம்.....

Dr.Suresh
Master- Shiva Guru Vasi Yoga

Tuesday, October 1, 2019

Natural Herbal Oil for all Hair Problems


உங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் கரும்பூலா

தலைமுடி உதிர்வதும் நிறம் மாறி நரைப்பதுமே, இன்றைய இளைய வயதினரின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இளம் வயதிலேயே, இயல்பான முடியின் கரு நிறம் மாறி செம்பட்டையாகி, முழுதும் நரைத்து விடுகிறது.

இளைஞர்கள் தங்கள் மொபைலுக்கு, தங்கள் வாகனத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தங்கள் தலைமுடிக்கு அளிக்க மறந்ததன் விளைவே, இந்த பாதிப்புகள் யாவும். பாதிப்புகள் வந்த பின்னர், அதைப் போக்க அதிக விலையுள்ள கிரீம்கள், மருந்துகள் வாங்கி, அதிலும் பலன்கள் கிடைக்காமல், மனதளவில் சோர்ந்து விடுகிறார்கள்.

நவீன கால வளர்ச்சிகளில், குளிக்கும்போது தலையில் தேய்த்தவுடன் ஏற்படும் நுரையில், தலையில் உள்ள பொடுகுகள் போன்ற தலை பாதிப்புகள் விலக பலவகைப்பட்ட ஷாம்பூக்கள் உபயோகிப்பதால், விருப்பமில்லாத எண்ணைக் குளியலை இன்றைய தலைமுறையினர் முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.

எண்ணைக் குளியலை, இன்று வீட்டில் உள்ள பெரியோர் வற்புறுத்தினாலும் யாரும் அதை பொருட்படுத்தாமல், அதெல்லாம் உன் காலம், என கேலி செய்யும் காலமாகிவிட்டது, இக்காலம்.

தலைமுடி நரைக்க எண்ணைக் குளியலை விட்டது ஒரு காரணம் என்றால், புரதச் சத்து இல்லாத துரித உணவுகள் மற்றொரு காரணமாகி விட்டன. கெமிக்கல் நிறைந்த நொறுக்குத் தீனிகள் மற்றும் பாக்கெட் தின்பண்டங்களும் அடக்கம்.

சனிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் :
சனிக்கிழமை வருகிறது என்றாலே வீடுகளில், சிறுவர்கள் அக்காலங்களில் பயந்து உடல் நலம் இல்லாதது போலவும், வேறு எதோ முக்கியமான பள்ளி வேலைகள் இருப்பது போலவும், பாசாங்கு செய்து, அன்று அவசியம் செய்யவேண்டிய எண்ணைக்குளியலைத் தவிர்க்க முயல்வார்கள். பழம் தின்று கொட்டை போட்ட, தாத்தா பாட்டியிடம் இந்த பாசாங்கு, கதையாகுமா? அத்துடன் தந்தை வந்தால், முதுகு தோல் உரிந்துவிடுமே, என்ற பயத்தில் சிறுவர்கள், உடலெங்கும் தாத்தாவோ அல்லது பாட்டியோ தேய்த்துவிட்ட எண்ணை காய, வெயிலில் அமர்ந்திருப்பார்கள்.

நன்மைகள் :
காய்ச்சிய நல்லெண்ணையை உடலில் தேய்த்து ஊற வைத்து குளித்து வர, உடல் சூடு விலகும், உடல் சூடு விலகி, உடலில் தன்மை இயல்பானாலே, பெரும்பாலான வியாதிகள் உடலை விட்டு நீங்கி விடும். உடலின் வியாதி எதிர்ப்பு சக்தி மேம்பட்டு, பிள்ளைகளுக்கு அடிக்கடி வரும் சளித்தொல்லைகள் விலகும், மேலும், கண் பார்வை தெளிவடையும், இத்துடன் தலையில் உள்ள பொடுகு போன்றவை நீங்கி, முடி உதிர்வு கட்டுப்பட்டு, முடிகள் கறுத்து வளரும்

நரைமுடி ஏற்படக் காரணமான உடல் பாதிப்புகள். :
புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இல்லாத, ஊட்டச்சத்தற்ற உணவுவகைகளை சாப்பிடுவது ஒரு பாதிப்பென்றால், வைட்டமின் பற்றாக்குறை, உடலில் ஏற்படும் வெண் படை தேமல் போன்ற சரும பாதிப்புகள், சர்க்கரை பாதிப்பு மற்றும் புகைப்பழக்கமும் மற்ற காரணங்களாகின்றன. சிலருக்கு பரம்பரை ஜீன்களாலும் தலைமுடி நரைத்து விடுகிறது. தலையில் ஏற்படும் பொடுகும், வேர்க்கால்களை பாதித்து, முடியை நரைக்க வைக்கின்றன. பொடுகை அழிக்க தடவிக் குளிக்கும் ஷாம்பூக்களில் உள்ள இரசாயனங்களும், தலைமுடி நரைக்க காரணமாகின்றன.

இளநரை ஏற்பட காரணம்:

தலைமுடிகளில் மெலனின் எனும் நிறமி அழிவதால், தலைமுடியின் இயல்பான நிறம் மாறி, தலைமுடி நரைக்கத் தொடங்குகிறது.

மெலனின் அழிவிற்கு காரணங்கள்தான், நாம் மேலே பகிர்ந்த அனைத்தும். நரைத்த முடிகளை வேருடன் பிடுங்குவதன் மூலமும், மெலனின் பாதித்த அணுக்கள் தலை முழுதும் பரவி, மற்ற முடிகளின் வேர்க்காலில் கலந்து நரையை தலையெங்கும் பரப்பிவிடுகிறது. இதனால்தான், பெரியோர் சொல்வார்கள், நரைத்த முடியை வேருடன் பிடுங்கக் கூடாது என்று.

நரைத்த ஒற்றை முடியைக் கண்டவுடன், வயது முதிர்ந்து மூப்பு வந்ததைப் போல பயந்து நடுங்கி, நரை முடியை வேரோடு பிடுங்கி விட்டால், அவை மீண்டும் வராது என்ற சுய தீர்மானத்தில் செய்யும் காரியம், அவர்களுக்கே, பாதிப்பைத் தந்து விடுகிறது

முடியை கறுக்க வைக்கும் அரிய மூலிகை..
தலைமுடிகள் நரைத்து இருப்பதைக் கட்டுப்படுத்தி, தலைமுடிகளின் வேர்க் கால்களில் உள்ள அணுக்களின் பாதிப்பை சீராக்கி, மீண்டும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க வைத்து, தலைமுடியை கறுக்க வைக்கும் ஒரு அரிய மூலிகைதான், கரும்பூலா.

கரும்பூலா செடிகளின் இலைகள் மற்றும் கனிகளில் உள்ள வேதிப்பொருட்கள், நரைப்பதற்கு காரணமான மெலனின் பாதிப்பை சரியாக்கி, தலைமுடிகளை கருப்பாக்குகின்றன.

கரும்பூலா மூலிகை எண்ணைய்:

கரும்பூலா, அவுரி, மருதோன்றி, கறிவேப்பிலை இலைகளை தனித்தனியே இடித்து சாறெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கரும்பூலா பழங்கள் மற்றும் நெல்லிக்காயை கொட்டைகள் நீக்கி, சதைப் பகுதிகளை சேகரித்து வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய் எண்ணையில் இவற்றையும், இலைகளின் சாற்றையும் கலந்து, அத்துடன் கடுக்காய் சூரணத்தை சிறிதளவு சேர்த்து, ஒரு மண் சட்டியில் இட்டு, வாயை ஒரு வெள்ளைத் துணியால் நன்கு சுற்றி, சூரிய ஒளியில் படுமாறு தினமும் வைக்க வேண்டும்.

கருமையாக மாறும் மாயம் :

இதுபோல ஓரிரு வாரங்கள் வைத்திருந்து, பின்னர் இந்த எண்ணையை வடித்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, தலையில் தேய்த்து நன்கு ஊற வைத்து, அதன்பின் தலையை சிகைக்காய் கொண்டு அலசி குளித்துவர, நரை விலகி, தலைமுடி விரைவில் கருப்பாக மாற ஆரம்பிக்கும். முடி உதிர்வு கட்டுப்படும்.

இந்த எண்ணையை, வெயிலில் வைக்காமல், காய்ச்சியும் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, எண்ணைகளை காய்ச்சி பயன்படுத்துவதைப் போல, சூரியப்புடம் எனும் முறையில் பயன்படுத்துவது, வேறொரு முறையாகும்.

கரும்பூலா மூலிகை :

அரிதான கரும்பூலா மூலிகை, காடுகளிலும் அடர்ந்த மலைகளிலும் காணப்படும் ஒரு மூலிகையாகும், உடலுக்கு நன்மைகள் செய்வது மட்டுமல்ல, ஆன்மீக விஷயங்களுக்கும் முக்கிய பொருளாக கரும்பூலா விளங்குகின்றது.

பொதுவாக கருப்பு நிறங்களில் கிடைக்கும் மூலிகைகளை உயர்வாகக் குறிப்பிடுவார்கள் முன்னோர்கள். கருந்துளசி, கருநொச்சி, கருநெல்லி போன்றவை மிகமிக அரிதானவை. அந்த வகையில் அரிதான ஒன்றுதான், கரும்பூலா மூலிகை.

கரும்பூலாவின் ஆற்றல் மற்றும் மருத்துவ தன்மைகள் கருதி, நகரங்களில் விதைகள் மூலம் கரும்பூலாவை, வளர்த்து வருகிறார்கள். கரும்பூலாவை, கிராமங்களில் புல்லாந்தி என்று அழைக்கிறார்கள்.

சரும வியாதிகள் :

நரைத்த தலைமுடிகளை வளமாக்கி, கருப்பு நிறத்தை அடைய வைப்பது மட்டுமன்றி, கரும்பூலா பல அரிய மருத்துவ நன்மைகளையும் அளிக்க வல்லது.

கரும்பூலாவின் இலைகள், இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கும், இலையை இட்டு காய்ச்சிய குடிநீர், சரும வியாதிகள், மூல பாதிப்புகள் மற்றும் பற்களின் பாதிப்பை குணமாக்கும் ஆற்றல் மிக்கது.

உடல் பொலிவாக்கும் :

கரும்பூலாவின் பழங்கள் உடல் இரத்த நாளங்களை வலுவாக்கி, உடலை பொலிவாக்கும் தன்மை மிக்கது. கரும்பூலா வேர்களும், மருத்துவ பலன்கள் மிக்கவை.

கரும்பூலா, ஆன்மிகம் தவிர்த்த விஷயங்களிலும், அதிகஅளவில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலிகையாகும்.

Cell: +91 988 4380 229