Thursday, October 3, 2019

What is Jeeva Samadhi


What is Jeeva Samadhi ?

ஒருவர் தவத்தின் மூலமாகவும், தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப்பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும்,

உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும்விட்டால்,

மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மனஇயக்கம், உடல் இயக்கம் நின்றுவிட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிருப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதுவே ஜீவசமாதி.

இதுபோலத் தமிழ்நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகியிருக்கிறார்கள்.

அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளார்கள்.

என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்றபோது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.

சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை.

ஜீவன் என்றால் உயிர். சமாதி என்றால் சமன்-ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

இறையே குருவே சரணம் சரணம்.....

Dr.Suresh
Master- Shiva Guru Vasi Yoga

Tuesday, October 1, 2019

Natural Herbal Oil for all Hair Problems


உங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் கரும்பூலா

தலைமுடி உதிர்வதும் நிறம் மாறி நரைப்பதுமே, இன்றைய இளைய வயதினரின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இளம் வயதிலேயே, இயல்பான முடியின் கரு நிறம் மாறி செம்பட்டையாகி, முழுதும் நரைத்து விடுகிறது.

இளைஞர்கள் தங்கள் மொபைலுக்கு, தங்கள் வாகனத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தங்கள் தலைமுடிக்கு அளிக்க மறந்ததன் விளைவே, இந்த பாதிப்புகள் யாவும். பாதிப்புகள் வந்த பின்னர், அதைப் போக்க அதிக விலையுள்ள கிரீம்கள், மருந்துகள் வாங்கி, அதிலும் பலன்கள் கிடைக்காமல், மனதளவில் சோர்ந்து விடுகிறார்கள்.

நவீன கால வளர்ச்சிகளில், குளிக்கும்போது தலையில் தேய்த்தவுடன் ஏற்படும் நுரையில், தலையில் உள்ள பொடுகுகள் போன்ற தலை பாதிப்புகள் விலக பலவகைப்பட்ட ஷாம்பூக்கள் உபயோகிப்பதால், விருப்பமில்லாத எண்ணைக் குளியலை இன்றைய தலைமுறையினர் முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.

எண்ணைக் குளியலை, இன்று வீட்டில் உள்ள பெரியோர் வற்புறுத்தினாலும் யாரும் அதை பொருட்படுத்தாமல், அதெல்லாம் உன் காலம், என கேலி செய்யும் காலமாகிவிட்டது, இக்காலம்.

தலைமுடி நரைக்க எண்ணைக் குளியலை விட்டது ஒரு காரணம் என்றால், புரதச் சத்து இல்லாத துரித உணவுகள் மற்றொரு காரணமாகி விட்டன. கெமிக்கல் நிறைந்த நொறுக்குத் தீனிகள் மற்றும் பாக்கெட் தின்பண்டங்களும் அடக்கம்.

சனிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் :
சனிக்கிழமை வருகிறது என்றாலே வீடுகளில், சிறுவர்கள் அக்காலங்களில் பயந்து உடல் நலம் இல்லாதது போலவும், வேறு எதோ முக்கியமான பள்ளி வேலைகள் இருப்பது போலவும், பாசாங்கு செய்து, அன்று அவசியம் செய்யவேண்டிய எண்ணைக்குளியலைத் தவிர்க்க முயல்வார்கள். பழம் தின்று கொட்டை போட்ட, தாத்தா பாட்டியிடம் இந்த பாசாங்கு, கதையாகுமா? அத்துடன் தந்தை வந்தால், முதுகு தோல் உரிந்துவிடுமே, என்ற பயத்தில் சிறுவர்கள், உடலெங்கும் தாத்தாவோ அல்லது பாட்டியோ தேய்த்துவிட்ட எண்ணை காய, வெயிலில் அமர்ந்திருப்பார்கள்.

நன்மைகள் :
காய்ச்சிய நல்லெண்ணையை உடலில் தேய்த்து ஊற வைத்து குளித்து வர, உடல் சூடு விலகும், உடல் சூடு விலகி, உடலில் தன்மை இயல்பானாலே, பெரும்பாலான வியாதிகள் உடலை விட்டு நீங்கி விடும். உடலின் வியாதி எதிர்ப்பு சக்தி மேம்பட்டு, பிள்ளைகளுக்கு அடிக்கடி வரும் சளித்தொல்லைகள் விலகும், மேலும், கண் பார்வை தெளிவடையும், இத்துடன் தலையில் உள்ள பொடுகு போன்றவை நீங்கி, முடி உதிர்வு கட்டுப்பட்டு, முடிகள் கறுத்து வளரும்

நரைமுடி ஏற்படக் காரணமான உடல் பாதிப்புகள். :
புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இல்லாத, ஊட்டச்சத்தற்ற உணவுவகைகளை சாப்பிடுவது ஒரு பாதிப்பென்றால், வைட்டமின் பற்றாக்குறை, உடலில் ஏற்படும் வெண் படை தேமல் போன்ற சரும பாதிப்புகள், சர்க்கரை பாதிப்பு மற்றும் புகைப்பழக்கமும் மற்ற காரணங்களாகின்றன. சிலருக்கு பரம்பரை ஜீன்களாலும் தலைமுடி நரைத்து விடுகிறது. தலையில் ஏற்படும் பொடுகும், வேர்க்கால்களை பாதித்து, முடியை நரைக்க வைக்கின்றன. பொடுகை அழிக்க தடவிக் குளிக்கும் ஷாம்பூக்களில் உள்ள இரசாயனங்களும், தலைமுடி நரைக்க காரணமாகின்றன.

இளநரை ஏற்பட காரணம்:

தலைமுடிகளில் மெலனின் எனும் நிறமி அழிவதால், தலைமுடியின் இயல்பான நிறம் மாறி, தலைமுடி நரைக்கத் தொடங்குகிறது.

மெலனின் அழிவிற்கு காரணங்கள்தான், நாம் மேலே பகிர்ந்த அனைத்தும். நரைத்த முடிகளை வேருடன் பிடுங்குவதன் மூலமும், மெலனின் பாதித்த அணுக்கள் தலை முழுதும் பரவி, மற்ற முடிகளின் வேர்க்காலில் கலந்து நரையை தலையெங்கும் பரப்பிவிடுகிறது. இதனால்தான், பெரியோர் சொல்வார்கள், நரைத்த முடியை வேருடன் பிடுங்கக் கூடாது என்று.

நரைத்த ஒற்றை முடியைக் கண்டவுடன், வயது முதிர்ந்து மூப்பு வந்ததைப் போல பயந்து நடுங்கி, நரை முடியை வேரோடு பிடுங்கி விட்டால், அவை மீண்டும் வராது என்ற சுய தீர்மானத்தில் செய்யும் காரியம், அவர்களுக்கே, பாதிப்பைத் தந்து விடுகிறது

முடியை கறுக்க வைக்கும் அரிய மூலிகை..
தலைமுடிகள் நரைத்து இருப்பதைக் கட்டுப்படுத்தி, தலைமுடிகளின் வேர்க் கால்களில் உள்ள அணுக்களின் பாதிப்பை சீராக்கி, மீண்டும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க வைத்து, தலைமுடியை கறுக்க வைக்கும் ஒரு அரிய மூலிகைதான், கரும்பூலா.

கரும்பூலா செடிகளின் இலைகள் மற்றும் கனிகளில் உள்ள வேதிப்பொருட்கள், நரைப்பதற்கு காரணமான மெலனின் பாதிப்பை சரியாக்கி, தலைமுடிகளை கருப்பாக்குகின்றன.

கரும்பூலா மூலிகை எண்ணைய்:

கரும்பூலா, அவுரி, மருதோன்றி, கறிவேப்பிலை இலைகளை தனித்தனியே இடித்து சாறெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கரும்பூலா பழங்கள் மற்றும் நெல்லிக்காயை கொட்டைகள் நீக்கி, சதைப் பகுதிகளை சேகரித்து வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய் எண்ணையில் இவற்றையும், இலைகளின் சாற்றையும் கலந்து, அத்துடன் கடுக்காய் சூரணத்தை சிறிதளவு சேர்த்து, ஒரு மண் சட்டியில் இட்டு, வாயை ஒரு வெள்ளைத் துணியால் நன்கு சுற்றி, சூரிய ஒளியில் படுமாறு தினமும் வைக்க வேண்டும்.

கருமையாக மாறும் மாயம் :

இதுபோல ஓரிரு வாரங்கள் வைத்திருந்து, பின்னர் இந்த எண்ணையை வடித்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, தலையில் தேய்த்து நன்கு ஊற வைத்து, அதன்பின் தலையை சிகைக்காய் கொண்டு அலசி குளித்துவர, நரை விலகி, தலைமுடி விரைவில் கருப்பாக மாற ஆரம்பிக்கும். முடி உதிர்வு கட்டுப்படும்.

இந்த எண்ணையை, வெயிலில் வைக்காமல், காய்ச்சியும் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, எண்ணைகளை காய்ச்சி பயன்படுத்துவதைப் போல, சூரியப்புடம் எனும் முறையில் பயன்படுத்துவது, வேறொரு முறையாகும்.

கரும்பூலா மூலிகை :

அரிதான கரும்பூலா மூலிகை, காடுகளிலும் அடர்ந்த மலைகளிலும் காணப்படும் ஒரு மூலிகையாகும், உடலுக்கு நன்மைகள் செய்வது மட்டுமல்ல, ஆன்மீக விஷயங்களுக்கும் முக்கிய பொருளாக கரும்பூலா விளங்குகின்றது.

பொதுவாக கருப்பு நிறங்களில் கிடைக்கும் மூலிகைகளை உயர்வாகக் குறிப்பிடுவார்கள் முன்னோர்கள். கருந்துளசி, கருநொச்சி, கருநெல்லி போன்றவை மிகமிக அரிதானவை. அந்த வகையில் அரிதான ஒன்றுதான், கரும்பூலா மூலிகை.

கரும்பூலாவின் ஆற்றல் மற்றும் மருத்துவ தன்மைகள் கருதி, நகரங்களில் விதைகள் மூலம் கரும்பூலாவை, வளர்த்து வருகிறார்கள். கரும்பூலாவை, கிராமங்களில் புல்லாந்தி என்று அழைக்கிறார்கள்.

சரும வியாதிகள் :

நரைத்த தலைமுடிகளை வளமாக்கி, கருப்பு நிறத்தை அடைய வைப்பது மட்டுமன்றி, கரும்பூலா பல அரிய மருத்துவ நன்மைகளையும் அளிக்க வல்லது.

கரும்பூலாவின் இலைகள், இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கும், இலையை இட்டு காய்ச்சிய குடிநீர், சரும வியாதிகள், மூல பாதிப்புகள் மற்றும் பற்களின் பாதிப்பை குணமாக்கும் ஆற்றல் மிக்கது.

உடல் பொலிவாக்கும் :

கரும்பூலாவின் பழங்கள் உடல் இரத்த நாளங்களை வலுவாக்கி, உடலை பொலிவாக்கும் தன்மை மிக்கது. கரும்பூலா வேர்களும், மருத்துவ பலன்கள் மிக்கவை.

கரும்பூலா, ஆன்மிகம் தவிர்த்த விஷயங்களிலும், அதிகஅளவில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலிகையாகும்.

Cell: +91 988 4380 229

Tuesday, September 24, 2019

Ayurveda and Astrology Secrets

Dr.V.Suresh. MD, DHSM, DYNC,Dr.Ac,PhD.,

www.supremeholisticinstitute.com

Medical Astrology

illustration of the Human Body and it’s Zodiacal and Planetary Correspondences.

Medical Astrology (traditionally known as Iatromathematics) is an ancient medical system that associates various parts of the body, diseases, and drugs as under the influence of the Sun, Moon, and Planets, along with the twelve Astrological Signs. Each of the Astrological Signs (along with the Sun, Moon, and Planets) is associated with different parts of the human body.

Medical astrology posits the association of each Sign of the Zodiac with parts of the body. The Signs of the Zodiac were believed to preside over the parts of the body, covering the body from head (Aries) to toe (Pisces).

AYURVEDA AND ASTROLOGY
Infact. before the advent of modern medical
science, in ancient times the physicjan~ were
advocated compulsory knowledge of astrology and it's
relevance to vanous disease" apart from
administering the medicines on different lunar days
and on difTerent stellar day •.
In Ayurveda, the diseases are classified in
Tridosha has (three humour.) to help to diagnose the
disease. The tridoshas for the planets are:
Son - - bilous
Moon - - airy and Phlegmatic
MarS - - bilous
Mercury - - airy, bilious" and phlegmatic :
Jupiter - - -  phlegmatic
Venus - - - airy
Saturn - -  Airy

7. PLANETS , DISEASES, RASHIS" AND PARTS OF BODY
(SAREERAM , VYADHI MANDlRM')
Apart from the Tridosha". the planet" are
Assigned differnt diseases by themselves. The rashis
and various stars are also assigned different diseases
on various parts of the body. To understand this phenomenon, we must know
as to how the human anatomy is reflected in the
zodical chart. I am now explaining the zodical chart.
See  the  chart...

8. P ARTS OF BODY RULED BY PLANETS AND MEDICAL
SIGNIFICANTS
Sun - - - - -  Heart, eye-sight, general body,
constitution, general health, eyes.

Moon - - - -  Breast, mind, head, chest, kidney, water
in body, heart

Mars - - - - -  Blood, marrow, genitals, rectum, veins,head, female organs, Fore-head, nose
vitality,pregnancy problems, blood
pressure, emotions, anger, aggression,
menstural cycle.

Mercury - Tongue, arms, mouth, chest, spinal cord,
gall bladder, nerves, skin, memory.

Jupiter - Fat, kidney, liver, tongue, right ear,
higher mental plane, diabities.

Saturn - All types of joints, particularly knee cap
and knee joints, arthritis, muscular
paIns.

Venus - Eye trouble, pigmentation causing
ugliness, problem of teeth, legs, hair,
bones, sweat glands, limbs, fatigue,
weakness, ageing, wrinkles, disease
causing acute sorrow, piles.

Ketu
- Bad teeth, dental problems, commit
suicidal mind, murderous acts, Maniac,
excretory organs, genitals.
- Feet, excretory organs (anus), impotency.

 CONSTELLATION AND PARTS OF THE BODY
(i) The parts of the body ruled by stars are as
under:
Ashwini - - - Upper feet
Bharani---- Lower feet
Kirtika--- Head
Rohini - - - Forehead
 ·Mrigashira - - - Eye brows
Ardra--- Eyes
Punarvasu - - - Nose
Pushya - - - Face
Ashlesha - - Ears
Makha - - - Chin
Purvaphalguni - - Right hand
U ttara phalguni - - - Left hand
Hasta - - - Fingers
Chitra - - Neck
Swati - - Chest
Vishakha - - - Lungs
Anuradha---- Stomach
Jyeshta - - - Right portion of stomach
Moola - - - Left stomach
Poorvashada - - - . Back
Uttarashada--- Waist
Shravana--- Upper genital
Dhanishta - - - Generative organs
Shathabhisha---- Right thigh
Purvabhadra - - - - Right thigh
Uttarabhadra--- Ankle
Revathi--- Feet

NAKSHATRA DEVATHAS :
Ashwini - - Ashwini devathas
Bharani - - - - Yama
Kritika - - - Agni
Rohini - - - Brahma
Mrigashira - - - Moon
Ardra - - - Rudra
Punavarsu---- Adithi
Pushya - - - - Brihaspathi
Ashlesha - - - - Sarpa
Magha - - - - Pitru
Purvaphalguni - - - Surya
U ttaraphalguni - - - Aryama
Hastha - - - Savithru
Chittha - - - Thwashtru
Swati - - - Vayu
Vishakha - - - - Indra
Anuradha - - - - Mitra
Jyeshta----- Moon
Moola---- Rakshasa
Poorvashada - - - JalaDevatha
Uttarashada - - - VishwaDevathas
Shravana - - Vishnu
Dhanishta - - - - Ashta vasu
Shathabhisha - - - - Varuna
Purvabhadra - - - - Jala
Uttarabhadra - - - - Brahma
Revathi - - - - Poosha.

Email: bksureshv@gmail.com

Friday, September 20, 2019

Navagraha Bio Data

#நவகிரகங்களின்_பயோடேட்டா .............*

*1.#சூரியன்.*
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

*2.#சந்திரன்.*
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்

*3 . #அங்காரகன் (செவ்வாய்)*
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்

*4.#புதன்.*
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்

*5.#குரு.*
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

*6.#சுக்கிரன்.*
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

*7.#சனி*
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்

*8.#ராகு*
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

*9.#கேது*
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்

*நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன.*
இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.

*காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.

*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

*கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

*தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.

* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.

*16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

*பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

*அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

*வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்

*நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.*

1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.

4.) ஸ்ரீ புதன் காயத்ரீ:- ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.

5.) ஸ்ரீ குரு காயத்ரீ:- ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.

6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:- ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

8.) ஸ்ரீ ராகு காயத்ரீ:- ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.

9.) ஸ்ரீ கேது காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்

சகல விதமான தோஷங்களின் வீரியத்தை குறைக்க நவகிரக ப்ரீத்தி செய்து கொள்ளுங்கள்.

Wednesday, September 11, 2019

Ghana yogam

💙ஞானயோகம்💙


ஞானம் என்றால் அறிவு.
அறிதல் என்று பொருள்படுகின்ற 'ஜ்ஞ' என்ற மூலச்சொல்லிலிருந்து இந் வார்த்தை பிறந்தது.

அறிவின் மூலம் அடையப்படுகின்ற
💜ஞானயோகம்💜

ஞானயோகத்தின் லட்சியம் என்ன?

முக்தி,விடுதலை.

எதிலிருந்து விடுதலை?

நமது குறைகளிலிருந்து விடுதலை

வாழ்க்கை துன்பங்களிலிருந்து விடுதலை.

நாம் ஏன் துன்பப்படுகிறோம்?
ஏனெனில் நாம் கட்டுண்டிருக்கிறோம்

அந்தக் கட்டு அல்லது தளை எது?
அது இயற்கை சம்பந்தப்பட்டது.

நம்மைக் கட்டி வைத்திருப்பது யார்?

🌷நாம்,நாமே🌷

இந்தப் பிரபஞ்சமே காரணகாரிய விதிகளால் கட்டப்பட்டிருக்கிறது.

அக உலகிலும் சரி, புற உலகிலும் சரி.
காரணமில்லாத எந்தப் பொருளோ எந்த உண்மையோ இருக்க முடியாது.

நம்மை கட்டியிருக்கின்ற இந்தத் தளையும் உண்மையானது. நாம் கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டியதில்லை.

உதாரணமாக
இந்த அறையிலிருந்து சுவரை ஊடுருவிக் கொண்டு என்னால் வெளியேற முடியுமானால் சந்தோஷமாகத்தான் இருக்கும்.

ஆனால் அது முடியாது
எனக்கு நோயே வராமல் இருக்குமானால் அது மிகவும் நல்லது.  ஆனால் நோய் வருவதை என்னால் தடுக்க முடியாது.

எனக்குச் சாவே கிடையாது என்றால் மிகவும் மகிழ்ச்சிதான், ஆனால் நான் இறந்தேயாக வேண்டும்.

என்னால் இயலாத லட்சக்கணக்கான விஷயங்களை எல்லாம் செய்ய முடியுமானால் பேரானந்தம் தான்.

ஆசை  இருக்கிறது,ஆனால் அதை நிறைவேற்றுவதில் வெற்றி பெற முடியவில்லை.

ஆசைகள் இருந்து, அவற்றை நிறைவேற்றும் வழி கிடைக்காமல் போகும்போதுதான் துன்பம் என்ற வினோதமான பிரதிச்செயல் உண்டாகிறது.

ஆசைக்கு காரணம் யார்?
நான்,நானே.

எனவே இப்போது நான் படும் துன்பங்களுக்கெல்லாம் நானே காரணம்.

💗சுவாமி விவேகானந்தர் 💗

🍃🌹🍃

Gayatri Mantra Miracles

காயத்ரி மந்திரம்:-2
--------------------------------
அணு முதல் அண்டம் வரை
அனைத்தும் அதிர்வுகளால் ஆக்கப்பட்டு
அதாலே சூழ்ந்துள்ளன.

அதிர்வுகள் அலைகளை ஏற்படுத்துகின்றன.
அலைகளே  சக்தியை தருகின்றன.
அனைத்தும் இயங்க அதிர்வலைகளே
காரணமாகின்றன.

காயத்ரி மந்திரம் உடலில் உள்ள சக்தி நிலைகளான ஆதார சக்கிரங்களை
சீர்படுத்தி அதனதன் அதிர்வுகளில்
செம்மையாக இயங்க உறுதுணை புரிகிறது.

ஒரு குறிப்பிட்ட பிரிவினரே பயன்படுத்தி வந்த
காயத்ரி மந்திரம் அனைவருக்குமானது.
எளிதானது. உயர்வானது.

இம் மந்திரத்தைச் முறைப்படி சொல்லச் சொல்ல
உடல் புத்துணர்ச்சியையும், புதிய தெம்பையும்
பெறுகிறது.

காயத்ரி மந்திரம் குறித்து அறிஞர்கள் கூறுவது:

பாரதியார் : செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள்
அறிவைத் தூண்டி நடத்துக.

சுவாமி விவேகானந்தர்: மந்திரங்களின் கிரீடம்.

J.B.S. Holdane (British- Indian Scientist):
ஒவ்வொரு இரசாயன கூடத்தின் வாயிற்கதவிலும் காயத்ரி மந்திரம்
பொறிக்கப்பட வேண்டும்.

பகவான் கிருஷ்ணர்: மந்திரங்களில் நான்
காயத்ரி மந்திரமாக உள்ளேன்.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்ஸர்:
இது மிகச் சிறிய மந்திரம். ஆனால் மிக மிக
சக்தி வாய்ந்தது.

மேலை நாட்டு ஞாநி Arthur Koestler :(Darkness at
noon எனும் உலகப் பிரசித்தி பெற்ற நூலாசிரியர்)
1000 அணு குண்டுகளின் சக்தி வாய்ந்தது.

ஜெர்மன் ஞாநி மேக்ஸ் முல்லர்:
ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனத்தினை உயர்த்துவோம்.

மகாத்மா காந்தி: யாரொருவர் காயத்ரி மந்திரம்
ஜெபிக்கிறாரோ அவர் நோயிக்கு ஆளாகமாட்டார்.

... தொடர்ந்து ஜெபிப்போம்.

Dr.Suresh
Master Shiva Guru Vasi Yoga
SPARK YOGA

Vasi Yoga alchemy Secrets

ஜீவ ஸமாதி

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும்.

மேலும் அவர்கள் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது.

ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் (மூச்சி/சுவாசம்) போய் மரணிப்பார்கள்.

ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது.

பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.

அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து போகும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது.

பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம்.... ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை.

இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள்.

எனவே நண்பர்களே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் அவர்கள் நினைத்த போது வரமுடியும் என்று சொல்லப்படுவதுண்டு. அப்படி வந்து மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மையாக விளக்கி அருளுவார்கள்.

"உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்."
பிராணனைக் கட்டுப்படுத்த முடிந்தவர் களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.
பலஆயிரம் ஆண்டுகள்வாழ்வது சாத்திமா? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.

"ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே".
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர்.

திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு.ஆனால் இந்த திருமந்திரப்பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.

இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.

"இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே."
இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ?

அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குகு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரை தான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல் படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள் ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால் தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார் கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்.

மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார்.

வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார்.

யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந் திருப்பவர்களை விபரம் தெரிந்தவர் கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர் கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.

அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர் களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.

சித்தர்கள் வழிபாடு வாழ்க்கையில் சிறப்பைத்தரும்....

ஓம் சிவயநம. ஓம் சிவ சிவ ஓம்.