Wednesday, October 30, 2019

For Healthy Body Karisalai Uses

Dr.V.Suresh MD(AM),Dr.Ac,DHSM,DYNC,FRHS,PhD.,
Founder :Aadhi Shiva Guru Vasi Yoga.
SPARK YOGA Alchemy.
Satya Yuga Samsthapana & Paripalana Kendra .

சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி.

உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம்.

சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும்.

இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.

இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைக்க வேண்டும்.

அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து  அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும்.

இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும்.கோழையை கழற்றுதல் என்பது இதுவே.

இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும்.

குறிப்பாக யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இச்செய்முறையை கடைபிடித்து கோழையை கழற்றி அதன்பின்பு பயிற்சியில் ஈடுபடுதல் மிகுந்த பலனை அளிக்கும்.🔱
Rajayogi Shiva Guru Dr.V.Suresh

Mind and Thoughts Secrets

"Aadhi Shiva Guru Vasi Yogam"

 Dr.V.Suresh MD(AM),Dr.Ac,DHSM,DYNC,Phd.,
Grand Master:Reiki
Founder :Shiva Guru Vasi Yoga.
SPARK YOGA Alchemy.
Satya Yuga Samsthapana & Paripalana Kendra.

எண்ணங்களின் வலிமை
======================

'யத் பாவம் - தத் பவதி'   நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகுவாய் என்கிறது வேதம்.

மனத்தானம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானம்
இன்னான் எனப்படுஞ் செயல்.

ஒருவரின் உணர்ச்சி, மனத்தை பொறுத்து அமையும் என்கிறார் வள்ளுவர்.

நமது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்துக்கும் நமது எண்ணங்களே காரணங்களாகின்றன. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பாகும். நமது மனம் எண்ணங்களை உருவாக்கும் தொழிற்சாலை போன்றதாகும். இதில் நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் என மாறி மாறி தோன்றி கொண்டேயிருக்கும். இன்றைய மனோத்தத்துவ நிபுணர்களின் கருத்துப்படி ஒரு நாளில் நம்முடைய மனதில் தோராயமாக 40000 எண்ணங்கள் வந்து செல்கின்றன. இவற்றில் பெரும்பாலும் உபயோகமற்ற மற்றும் எதிர்மறை எண்ணங்ளாகவே இருக்கின்றன என்று கூறுகின்றனர். மேலும் நம்மிடம் தோன்றும் எண்ணங்களை நாம் சரியாக கவனிக்காமல் இருந்தால் நாம் அவற்றால் பாதிக்கப்படுவோம். ஒரு நல்ல விளைநிலத்தில் எந்த விதமான செயலையும் செய்யாமல் விட்டு விட்டோமானால் அந்த விளை நிலத்தில் அனைத்து விதமான செடிகளும் முளைத்து விடும். மேலும் தீய உயிரினங்கள் வாழும் இடமாகவும் அது திகழும். அது போல நம் மனம் என்ற நிலத்தில் நல்ல விதைகளை (எண்ணங்களை) விதைக்காமல் இருந்தாலோ அல்லது அதன் போக்கில் விட்டு விட்டாலோ அது நமது வாழ்க்கையை சீரழிக்கும் பாதைக்கு நம் மனம் கூட்டி சென்று விடும்.

நமது மனதின் குணத்தை நமது முன்னோர்கள் குரங்கு புத்தியுடன் ஒப்பிட்டார்கள். நீங்கள் குரங்கு எவ்வாறு மனிதனிடம் பிடிபடுகிறது என்பதை அறிவீர்களா? ஒரு நீண்ட கழுத்துள்ள மண் குவளையை ஒரு இடத்தில் பதிய வைத்து அதன் உள் பழங்களை வைத்து விடுவார்கள். குரங்கின் கை ஆனது உள்ளே சென்று பழத்தை பற்றி கொண்டு வெளியே எடுக்க முயற்சிக்கும் போது அதனால் அதன் கையை வெளியே எடுக்காதவாறு குவளையின் வாய் பகுதி தடுக்கும். குரங்கானது பழத்தின் மீது உள்ள பற்றினை விடாமல் முயற்சி செய்து பார்த்து கையை வெளியே எடுக்க முடியாமல் அப்படியே அமர்ந்து விடும். ஆனால் அது தன்னுடைய கையை பழத்தின் மீது இருந்து எடுத்து விட்டால் அது அந்த குவளையிடமிருந்து விடுபட்டு சென்று விடலாம். ஆனால் அதன் புத்தியானது பிடித்ததை விடாமல் பற்றி கொண்டதிலேயே இருக்கும். சில நேரங்களில் அப்படியே இருந்து உணவின்றி அது இறந்து போகும். இது போல தான் நாம் நம் மனதில் எழும் எண்ணங்களை ஆராயாமல் உடனடியாக செயல்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் பிரச்சனையில் சிக்கி நம்மை நாம் இழந்து விடுகிறோம்.

இன்று நாம்  காணும் அனைத்து பொருட்களுமே என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு மனிதனின் மனதில் உதிர்ந்த எண்ணங்களின் வெளிப்பாடே ஆகும். இன்றைய சமுதாயத்தில் நிலவும் அனைத்து சூழ்நிலைக்கும் காரணம் மனிதனின் மனதில் எழும் எண்ணங்களின் செயல்பாடுகளே என்பதை மறுக்க முடியாது. ஆகவே எண்ணங்களின் வலிமையை கொண்டு நாம் ஆக்கபூர்வமான காரியங்களையும் செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் காரியங்களையும் செய்ய முடியும். நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் கடலில் தோன்றும் அலைகளுக்கு ஒப்பிடலாம். எப்படி நாம் கடலின் அலைகளை கடந்து உள்ளே சென்றோமானால் கடலின் அமைதியை காண்கிறோம் மேலும் அதன் உள்ளே முழ்கி சென்றால் விலைமதிப்பிலாத முத்து மற்றும் பவிழம் போன்ற விலையுர்ந்த பொருட்களை நம்மால் கண்டு எடுக்க முடியுமோ, அது போல் நாம் நமது மனதின் உள்ளே சென்று ஆழ் மனதின் செயல்பாடுகளை புரிந்து கொண்டோமானால் நாம் விரும்பியது அனைத்தும் நம்மால் அடையமுடியும்.
நம்முடைய எண்ணங்களை பொறுத்து நம் உடலை சுற்றி ஒளி வட்டம் உள்ளது. இதனை ஆரா என்று அழைப்பார்கள். இது அனைத்து மனிதர்களிடமும் உண்டு. நாம் சந்திக்கும் மனிதர்களின் உடலில் இருந்து வெளிப்படும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை எண்ணங்களை நம் உடலானது பெற்று அதன் மூலமும் நம் மனதில் மாற்றம் ஏற்படுகிறது.  உதாரணமாக ஆன்மீக பெரியோர்களை நாம் சந்திக்கும் போது நம் மனம் மிகவும் சாந்தியடைகிறது. சில சுயநலப்போக்கு கொண்ட மனிதர்களை சந்திக்கும் போது நமது மனம் பாதிப்பிற்கு உள்ளாகிறது இவை அனைத்துமே அவர்களிடமிருந்து வெளிப்படும் எண்ண அதிர்வினால் தான்.

நேர்மறை எண்ணங்களை மேம்படுத்த கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்.
1.       பயிற்சி பெற்ற சிறந்த யோக நிபுணர்களை அணுகி மனதினை ஒரு முகப்படுத்தும் ஆசனங்கள் மற்றும் தியான முறைகளை பின்பற்றுதல்.
2.      சத்சங்களில் நாம் இணைந்திருத்தல்.
3.      இறைவன் நாமத்தை தொடர்ந்து ஜபித்தல்.
4.      சாத்வீக உணவுகளை உட்கொண்டு, சாத்வீக உணர்வு உள்ளவர்களிடம் பழகுதல்.
5.      ஆலய வழிப்பாடு செய்தல்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில செயல்களால் நாம் நமது நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தி கொள்ளமுடியும். எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒரு தீக்குச்சி போன்றது நாம் அதனை புத்தி என்னும் தீப்பெட்டியால் உரசும் போது அது தீப்பற்றி கொள்கிறது. அந்த தீயை  நாம் நல்லவற்றுக்கும் பயன்படுத்தமுடியும் தீயவற்றுக்கும் பயன் படுத்த முடியும். முறையாக பயன்படுத்த தவறினால் நம்மையே அந்த தீ அழித்து விடும். ஆகவே நாம் நமது எண்ணங்களை முறைப்படுத்துவோம். அதன் மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்துவோம்.

Rajayogi Shiva Yoga Guru Dr.Suresh.

Tuesday, October 22, 2019

Soul Seat in Human Body

Sri Aadhi Shiva Guru Vasi Yogam

Dr.Suresh
Master : Aadhi Shiva Guru Vasi Yoga

திருமூலர் சிந்தனை :
================

"திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும்"
---------------------------------------------------------------------

"நமது உடலில் உயிர் எங்கே
இருக்கிறது ( அமர்கிறது ) விளக்கும்
திருமூலரின் திருமந்திரம்" :

நமது உடலில் உயிர் ஓடிக் கொடிருப்பதால் தான் நாம் செயல்பட முடிகிறது என்பது இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.
இதே திருமந்திரத்தில் ஒரு தாயின் தொப்புல்கொடியில் இருந்துதான் கரு என்னும் பிண்டத்திற்கு மெல்லிய சத்ததுடன் உயிர் சென்று கருவுக்கு உயிரூட்டுகிறது என்பதை திருமூலர் கூரியுள்ளார்.
ஆனால் அவ்வாறு சென்ற உயிர் உடலில் எந்த பாகத்தில் போய் அமர்கிறது என்ற சந்தேகம் மேலோங்கும்.

அந்த சந்தேகத்தை திருமூலரே தீர்த்து வைக்கிறார்.

“உச்சிக்கு கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை”
“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே” (தி.ம 309)

பொருள்:
உயிர் சென்று அமரும் இடம் தலை உச்சிக்கு கீழே உள்நாக்கிற்கு மேலே. தாயின் தொப்புள் கொடியில் இருந்து வரும் உயிர் நமது உச்சிக்கு கீழே வந்தமருகிறது.

விஞ்ஞானம்:
இன்றைய விஞ்ஞானத்தின் படி பார்த்தாலும் நமது நரம்பு மண்டலத்தின் முடிச்சி இந்த இடத்தில்தான் அமைந்துள்ளது.
நமது முதுகு தண்டுவடம் (Spinal card) இந்த இடத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
உயிர் அமரும் இடமட்டுமல்லாமல் அதன் வடிவத்தையும் நிறத்தையும் பற்றிக் கூட நமது திருமூலர் சித்தர் கூறியிருக்கிறார்.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

OM secrets

Dr.Suresh
Master : Shiva Guru Vasi Yogam

ௐ ஓங்காரம்(பிரணவம்)
======================

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.
இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.
வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,
"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)
"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)
என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-

என்பவற்றாலும் அறியலாம்.
உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து:
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,
அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,
அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்
உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.
இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்
அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "
என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.
ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.
இதை விளக்கும்படி திருமூலர்,
ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.
"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.
"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
போன்றவை எளிதானவைதானே!
பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :
பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....
ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.

Thursday, October 3, 2019

What is Jeeva Samadhi


What is Jeeva Samadhi ?

ஒருவர் தவத்தின் மூலமாகவும், தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப்பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும்,

உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும்விட்டால்,

மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மனஇயக்கம், உடல் இயக்கம் நின்றுவிட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிருப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதுவே ஜீவசமாதி.

இதுபோலத் தமிழ்நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகியிருக்கிறார்கள்.

அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளார்கள்.

என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்றபோது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.

சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை.

ஜீவன் என்றால் உயிர். சமாதி என்றால் சமன்-ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

இறையே குருவே சரணம் சரணம்.....

Dr.Suresh
Master- Shiva Guru Vasi Yoga

Tuesday, October 1, 2019

Natural Herbal Oil for all Hair Problems


உங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் கரும்பூலா

தலைமுடி உதிர்வதும் நிறம் மாறி நரைப்பதுமே, இன்றைய இளைய வயதினரின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இளம் வயதிலேயே, இயல்பான முடியின் கரு நிறம் மாறி செம்பட்டையாகி, முழுதும் நரைத்து விடுகிறது.

இளைஞர்கள் தங்கள் மொபைலுக்கு, தங்கள் வாகனத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தங்கள் தலைமுடிக்கு அளிக்க மறந்ததன் விளைவே, இந்த பாதிப்புகள் யாவும். பாதிப்புகள் வந்த பின்னர், அதைப் போக்க அதிக விலையுள்ள கிரீம்கள், மருந்துகள் வாங்கி, அதிலும் பலன்கள் கிடைக்காமல், மனதளவில் சோர்ந்து விடுகிறார்கள்.

நவீன கால வளர்ச்சிகளில், குளிக்கும்போது தலையில் தேய்த்தவுடன் ஏற்படும் நுரையில், தலையில் உள்ள பொடுகுகள் போன்ற தலை பாதிப்புகள் விலக பலவகைப்பட்ட ஷாம்பூக்கள் உபயோகிப்பதால், விருப்பமில்லாத எண்ணைக் குளியலை இன்றைய தலைமுறையினர் முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.

எண்ணைக் குளியலை, இன்று வீட்டில் உள்ள பெரியோர் வற்புறுத்தினாலும் யாரும் அதை பொருட்படுத்தாமல், அதெல்லாம் உன் காலம், என கேலி செய்யும் காலமாகிவிட்டது, இக்காலம்.

தலைமுடி நரைக்க எண்ணைக் குளியலை விட்டது ஒரு காரணம் என்றால், புரதச் சத்து இல்லாத துரித உணவுகள் மற்றொரு காரணமாகி விட்டன. கெமிக்கல் நிறைந்த நொறுக்குத் தீனிகள் மற்றும் பாக்கெட் தின்பண்டங்களும் அடக்கம்.

சனிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் :
சனிக்கிழமை வருகிறது என்றாலே வீடுகளில், சிறுவர்கள் அக்காலங்களில் பயந்து உடல் நலம் இல்லாதது போலவும், வேறு எதோ முக்கியமான பள்ளி வேலைகள் இருப்பது போலவும், பாசாங்கு செய்து, அன்று அவசியம் செய்யவேண்டிய எண்ணைக்குளியலைத் தவிர்க்க முயல்வார்கள். பழம் தின்று கொட்டை போட்ட, தாத்தா பாட்டியிடம் இந்த பாசாங்கு, கதையாகுமா? அத்துடன் தந்தை வந்தால், முதுகு தோல் உரிந்துவிடுமே, என்ற பயத்தில் சிறுவர்கள், உடலெங்கும் தாத்தாவோ அல்லது பாட்டியோ தேய்த்துவிட்ட எண்ணை காய, வெயிலில் அமர்ந்திருப்பார்கள்.

நன்மைகள் :
காய்ச்சிய நல்லெண்ணையை உடலில் தேய்த்து ஊற வைத்து குளித்து வர, உடல் சூடு விலகும், உடல் சூடு விலகி, உடலில் தன்மை இயல்பானாலே, பெரும்பாலான வியாதிகள் உடலை விட்டு நீங்கி விடும். உடலின் வியாதி எதிர்ப்பு சக்தி மேம்பட்டு, பிள்ளைகளுக்கு அடிக்கடி வரும் சளித்தொல்லைகள் விலகும், மேலும், கண் பார்வை தெளிவடையும், இத்துடன் தலையில் உள்ள பொடுகு போன்றவை நீங்கி, முடி உதிர்வு கட்டுப்பட்டு, முடிகள் கறுத்து வளரும்

நரைமுடி ஏற்படக் காரணமான உடல் பாதிப்புகள். :
புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இல்லாத, ஊட்டச்சத்தற்ற உணவுவகைகளை சாப்பிடுவது ஒரு பாதிப்பென்றால், வைட்டமின் பற்றாக்குறை, உடலில் ஏற்படும் வெண் படை தேமல் போன்ற சரும பாதிப்புகள், சர்க்கரை பாதிப்பு மற்றும் புகைப்பழக்கமும் மற்ற காரணங்களாகின்றன. சிலருக்கு பரம்பரை ஜீன்களாலும் தலைமுடி நரைத்து விடுகிறது. தலையில் ஏற்படும் பொடுகும், வேர்க்கால்களை பாதித்து, முடியை நரைக்க வைக்கின்றன. பொடுகை அழிக்க தடவிக் குளிக்கும் ஷாம்பூக்களில் உள்ள இரசாயனங்களும், தலைமுடி நரைக்க காரணமாகின்றன.

இளநரை ஏற்பட காரணம்:

தலைமுடிகளில் மெலனின் எனும் நிறமி அழிவதால், தலைமுடியின் இயல்பான நிறம் மாறி, தலைமுடி நரைக்கத் தொடங்குகிறது.

மெலனின் அழிவிற்கு காரணங்கள்தான், நாம் மேலே பகிர்ந்த அனைத்தும். நரைத்த முடிகளை வேருடன் பிடுங்குவதன் மூலமும், மெலனின் பாதித்த அணுக்கள் தலை முழுதும் பரவி, மற்ற முடிகளின் வேர்க்காலில் கலந்து நரையை தலையெங்கும் பரப்பிவிடுகிறது. இதனால்தான், பெரியோர் சொல்வார்கள், நரைத்த முடியை வேருடன் பிடுங்கக் கூடாது என்று.

நரைத்த ஒற்றை முடியைக் கண்டவுடன், வயது முதிர்ந்து மூப்பு வந்ததைப் போல பயந்து நடுங்கி, நரை முடியை வேரோடு பிடுங்கி விட்டால், அவை மீண்டும் வராது என்ற சுய தீர்மானத்தில் செய்யும் காரியம், அவர்களுக்கே, பாதிப்பைத் தந்து விடுகிறது

முடியை கறுக்க வைக்கும் அரிய மூலிகை..
தலைமுடிகள் நரைத்து இருப்பதைக் கட்டுப்படுத்தி, தலைமுடிகளின் வேர்க் கால்களில் உள்ள அணுக்களின் பாதிப்பை சீராக்கி, மீண்டும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க வைத்து, தலைமுடியை கறுக்க வைக்கும் ஒரு அரிய மூலிகைதான், கரும்பூலா.

கரும்பூலா செடிகளின் இலைகள் மற்றும் கனிகளில் உள்ள வேதிப்பொருட்கள், நரைப்பதற்கு காரணமான மெலனின் பாதிப்பை சரியாக்கி, தலைமுடிகளை கருப்பாக்குகின்றன.

கரும்பூலா மூலிகை எண்ணைய்:

கரும்பூலா, அவுரி, மருதோன்றி, கறிவேப்பிலை இலைகளை தனித்தனியே இடித்து சாறெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கரும்பூலா பழங்கள் மற்றும் நெல்லிக்காயை கொட்டைகள் நீக்கி, சதைப் பகுதிகளை சேகரித்து வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய் எண்ணையில் இவற்றையும், இலைகளின் சாற்றையும் கலந்து, அத்துடன் கடுக்காய் சூரணத்தை சிறிதளவு சேர்த்து, ஒரு மண் சட்டியில் இட்டு, வாயை ஒரு வெள்ளைத் துணியால் நன்கு சுற்றி, சூரிய ஒளியில் படுமாறு தினமும் வைக்க வேண்டும்.

கருமையாக மாறும் மாயம் :

இதுபோல ஓரிரு வாரங்கள் வைத்திருந்து, பின்னர் இந்த எண்ணையை வடித்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, தலையில் தேய்த்து நன்கு ஊற வைத்து, அதன்பின் தலையை சிகைக்காய் கொண்டு அலசி குளித்துவர, நரை விலகி, தலைமுடி விரைவில் கருப்பாக மாற ஆரம்பிக்கும். முடி உதிர்வு கட்டுப்படும்.

இந்த எண்ணையை, வெயிலில் வைக்காமல், காய்ச்சியும் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, எண்ணைகளை காய்ச்சி பயன்படுத்துவதைப் போல, சூரியப்புடம் எனும் முறையில் பயன்படுத்துவது, வேறொரு முறையாகும்.

கரும்பூலா மூலிகை :

அரிதான கரும்பூலா மூலிகை, காடுகளிலும் அடர்ந்த மலைகளிலும் காணப்படும் ஒரு மூலிகையாகும், உடலுக்கு நன்மைகள் செய்வது மட்டுமல்ல, ஆன்மீக விஷயங்களுக்கும் முக்கிய பொருளாக கரும்பூலா விளங்குகின்றது.

பொதுவாக கருப்பு நிறங்களில் கிடைக்கும் மூலிகைகளை உயர்வாகக் குறிப்பிடுவார்கள் முன்னோர்கள். கருந்துளசி, கருநொச்சி, கருநெல்லி போன்றவை மிகமிக அரிதானவை. அந்த வகையில் அரிதான ஒன்றுதான், கரும்பூலா மூலிகை.

கரும்பூலாவின் ஆற்றல் மற்றும் மருத்துவ தன்மைகள் கருதி, நகரங்களில் விதைகள் மூலம் கரும்பூலாவை, வளர்த்து வருகிறார்கள். கரும்பூலாவை, கிராமங்களில் புல்லாந்தி என்று அழைக்கிறார்கள்.

சரும வியாதிகள் :

நரைத்த தலைமுடிகளை வளமாக்கி, கருப்பு நிறத்தை அடைய வைப்பது மட்டுமன்றி, கரும்பூலா பல அரிய மருத்துவ நன்மைகளையும் அளிக்க வல்லது.

கரும்பூலாவின் இலைகள், இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கும், இலையை இட்டு காய்ச்சிய குடிநீர், சரும வியாதிகள், மூல பாதிப்புகள் மற்றும் பற்களின் பாதிப்பை குணமாக்கும் ஆற்றல் மிக்கது.

உடல் பொலிவாக்கும் :

கரும்பூலாவின் பழங்கள் உடல் இரத்த நாளங்களை வலுவாக்கி, உடலை பொலிவாக்கும் தன்மை மிக்கது. கரும்பூலா வேர்களும், மருத்துவ பலன்கள் மிக்கவை.

கரும்பூலா, ஆன்மிகம் தவிர்த்த விஷயங்களிலும், அதிகஅளவில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலிகையாகும்.

Cell: +91 988 4380 229

Tuesday, September 24, 2019

Ayurveda and Astrology Secrets

Dr.V.Suresh. MD, DHSM, DYNC,Dr.Ac,PhD.,

www.supremeholisticinstitute.com

Medical Astrology

illustration of the Human Body and it’s Zodiacal and Planetary Correspondences.

Medical Astrology (traditionally known as Iatromathematics) is an ancient medical system that associates various parts of the body, diseases, and drugs as under the influence of the Sun, Moon, and Planets, along with the twelve Astrological Signs. Each of the Astrological Signs (along with the Sun, Moon, and Planets) is associated with different parts of the human body.

Medical astrology posits the association of each Sign of the Zodiac with parts of the body. The Signs of the Zodiac were believed to preside over the parts of the body, covering the body from head (Aries) to toe (Pisces).

AYURVEDA AND ASTROLOGY
Infact. before the advent of modern medical
science, in ancient times the physicjan~ were
advocated compulsory knowledge of astrology and it's
relevance to vanous disease" apart from
administering the medicines on different lunar days
and on difTerent stellar day •.
In Ayurveda, the diseases are classified in
Tridosha has (three humour.) to help to diagnose the
disease. The tridoshas for the planets are:
Son - - bilous
Moon - - airy and Phlegmatic
MarS - - bilous
Mercury - - airy, bilious" and phlegmatic :
Jupiter - - -  phlegmatic
Venus - - - airy
Saturn - -  Airy

7. PLANETS , DISEASES, RASHIS" AND PARTS OF BODY
(SAREERAM , VYADHI MANDlRM')
Apart from the Tridosha". the planet" are
Assigned differnt diseases by themselves. The rashis
and various stars are also assigned different diseases
on various parts of the body. To understand this phenomenon, we must know
as to how the human anatomy is reflected in the
zodical chart. I am now explaining the zodical chart.
See  the  chart...

8. P ARTS OF BODY RULED BY PLANETS AND MEDICAL
SIGNIFICANTS
Sun - - - - -  Heart, eye-sight, general body,
constitution, general health, eyes.

Moon - - - -  Breast, mind, head, chest, kidney, water
in body, heart

Mars - - - - -  Blood, marrow, genitals, rectum, veins,head, female organs, Fore-head, nose
vitality,pregnancy problems, blood
pressure, emotions, anger, aggression,
menstural cycle.

Mercury - Tongue, arms, mouth, chest, spinal cord,
gall bladder, nerves, skin, memory.

Jupiter - Fat, kidney, liver, tongue, right ear,
higher mental plane, diabities.

Saturn - All types of joints, particularly knee cap
and knee joints, arthritis, muscular
paIns.

Venus - Eye trouble, pigmentation causing
ugliness, problem of teeth, legs, hair,
bones, sweat glands, limbs, fatigue,
weakness, ageing, wrinkles, disease
causing acute sorrow, piles.

Ketu
- Bad teeth, dental problems, commit
suicidal mind, murderous acts, Maniac,
excretory organs, genitals.
- Feet, excretory organs (anus), impotency.

 CONSTELLATION AND PARTS OF THE BODY
(i) The parts of the body ruled by stars are as
under:
Ashwini - - - Upper feet
Bharani---- Lower feet
Kirtika--- Head
Rohini - - - Forehead
 ·Mrigashira - - - Eye brows
Ardra--- Eyes
Punarvasu - - - Nose
Pushya - - - Face
Ashlesha - - Ears
Makha - - - Chin
Purvaphalguni - - Right hand
U ttara phalguni - - - Left hand
Hasta - - - Fingers
Chitra - - Neck
Swati - - Chest
Vishakha - - - Lungs
Anuradha---- Stomach
Jyeshta - - - Right portion of stomach
Moola - - - Left stomach
Poorvashada - - - . Back
Uttarashada--- Waist
Shravana--- Upper genital
Dhanishta - - - Generative organs
Shathabhisha---- Right thigh
Purvabhadra - - - - Right thigh
Uttarabhadra--- Ankle
Revathi--- Feet

NAKSHATRA DEVATHAS :
Ashwini - - Ashwini devathas
Bharani - - - - Yama
Kritika - - - Agni
Rohini - - - Brahma
Mrigashira - - - Moon
Ardra - - - Rudra
Punavarsu---- Adithi
Pushya - - - - Brihaspathi
Ashlesha - - - - Sarpa
Magha - - - - Pitru
Purvaphalguni - - - Surya
U ttaraphalguni - - - Aryama
Hastha - - - Savithru
Chittha - - - Thwashtru
Swati - - - Vayu
Vishakha - - - - Indra
Anuradha - - - - Mitra
Jyeshta----- Moon
Moola---- Rakshasa
Poorvashada - - - JalaDevatha
Uttarashada - - - VishwaDevathas
Shravana - - Vishnu
Dhanishta - - - - Ashta vasu
Shathabhisha - - - - Varuna
Purvabhadra - - - - Jala
Uttarabhadra - - - - Brahma
Revathi - - - - Poosha.

Email: bksureshv@gmail.com